Thursday, April 23, 2009

பிரிட்டனுடன் கூட்டாக நிவாரணப் பணியில் ஈடுபட பிரான்ஸ் முயற்சி: முல்லைத்தீவுக்கு படகுகளை அனுப்பமுடியும் என்கிறார் குச்னர்

[வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009] மோதல் பகுதியிலிருந்து வெளியேறிய பொதுமக்களுக்கு பிரிட்டனுடன் இணைந்து கூட்டாக நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்கான யோசனையை பிரான்ஸ் நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. நடவடிக்கை ஒன்றை ஆரம்பிக்க நாம் முயற்சிக்கின்றோம் என்று பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் வானொலிப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதுடன் இந்தத் திட்டம் தொடர்பாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட்டுடன் கலந்தாராய இருப்பதாகவும் கூறியுள்ளார். மோதல் பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் கடற்கரையில் இருப்பதாகவும் சிலர் கடலுக்குள் மூழ்குவதாகவும் தெரிவித்திருக்கும் குச்னர் இந்தப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவியளிக்க படகுகளை அனுப்பிவைக்க முடியுமெனத் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில் கடந்த இருநாட்களில் 60 ஆயிரம் பொதுமக்கள் வெளியேறி இருப்பதாக அரசாங்கம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை தமது யோசனை தற்போது ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக குச்னர் கூறியுள்ளதாக ஏ.எவ.பி செய்திச்சேவை தெரிவித்தது. நிவாரணப் பணிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக நீங்கள் அறிவீர்கள். துரதிஷ்டவசமாக அரசாங்கங்கள் தொடர்பாக மக்கள் மிக களைப்படைந்துள்ளார்கள் என்று குச்னர் பிரான்சின் கலாசார வானொலிக்குத் தெரிவித்தார். அதேசமயம் இராணுவ ரீதியான தலையீடு தொடர்பான திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். நிச்சயமாக நாம் அந்தத் கட்டத்தை எட்டவில்லை என்றும் குச்னர் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.