Thursday, April 23, 2009

மக்கள் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும்: நியூசிலாநது

[வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009] வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களினது பாதுகாப்பை கருத்திற் கொண்டு இலங்கை அரசாங்கம் பேர் நிறுத்தமொன்றை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் மரே மெக்யூலி தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் செவி சாய்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த சூனிய பிரதேசத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் நிலைமை குறித்து நியூசிலாந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் யுத்த வலயத்திற்கு சுதந்திரமாக செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் மெக்யூலி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.