Wednesday, April 22, 2009

யுத்தம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழக்கின்றனர்: அனைத்துலக மன்னிப்புச் சபை

[புதன்கிழமை, 22 ஏப்ரல் 2009] யுத்தம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்பதாக அனைத்துலக மன்னிப்பச் சபை தகவல் வெளியிட்டுள்ளது. அண்மைய மோதல்களின் போது சுமார் 4500 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்கள் உயிரிழப்புக்களை தவிர்க்கும் வகையில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினர் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானதென அமைப்பு குறிப்பிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான இறுதிக் கட்ட போரராட்டத்தின் போது அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழக்கக் கூடும் என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடி போர் நிறுத்தமொன்று குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொல்னா பொஸ்டர் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினரும் சர்வதேச யுத்த சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.