[புதன்கிழமை, 22 ஏப்ரல் 2009] இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெற்று வரும் யுத்தம் குறித்த உண்மைத் தகவல்களை அளிந்து கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக பி.பி.சீ உலக சேவை தகவல் வெளியிட்டுள்ளது. ஓரு புறம் அரசாங்கத்திற்கு சார்பான பாதுகாப்பு அமைச்சு மற்றும் அரச ஊடகங்கள் இராணுவத்திற்கு சார்பான தகவல்களையும், மறுபுறம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணைய தளங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் செய்திகளை வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பக்கச் சார்பற்ற உண்மையான செய்திகளை அறிந்து கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. ஆயுத போராட்ட முனைப்புக்களைப் போன்றே பிரச்சார போராட்டங்களும் முனைப்பு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு இலங்கையின் வடபகுதியில் செய்திகளை சேகரிக்க அனுமதியளிக்கப்படுவதில்லை குறிப்பிடப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளைப் போன்று இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சி மேற்கொள்ளும் ஊடகவியலாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். வடபகுதிக்குச் செய்தி சேகரிக்கச் செல்லும் சுதந்திர ஊடகவியலாளர்கள் சோதனைச் சாவடிகளிலேயே திருப்பி அனுப்பப் படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் ஊடக சுதந்திரம் ஓர் இரும்புக் கரத்தினால் தடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமான முறையில் செய்திகளை சேகரிப்பதற்கு பல்வேறு வழிகளில் தடை ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Wednesday, April 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.