[புதன்கிழமை, 22 ஏப்ரல் 2009] இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த சூழ்நிலை மற்றும் மனிதாபிமான நிலவரங்கள் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் சபையில் விவாதம் ஒன்று நடைபெற்றுள்ளது. விவாதத்தின்போது பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அப்பாவிச் சிவிலியன்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் ஜிம் மெக்.கவர்ன் ((Jim McGovern) தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அப்பாவிச் சிவிலியன்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் தற்போது இடம் நகர்ந்து வருவதாகவும் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படக் கூடும் எனவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான இலங்கை முகவர் அமின் அவாட் (Amin Awad) ) தெரிவித்தார். கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையில் படுகாயங்களுக்கு உள்ளான 9000 சிவிலியன்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மேலும் 50,000 முதல் 60,000 வரையிலான சிவிலியன்கள் எஞ்சியிருக்கக் கூடும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். சிவிலியன் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு இலங்கையில் உடனடியாக மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவாட் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் ஈடுபட்டு வரும் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் பிரதிநிதி அன்னா நய்ஸ்டாட் தெரிவித்தார். வன்னிச் சிவிலியன்களது நிலைமை நாளுக்கு நாள் மோசமான நிலையை அடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். யுத்தப் பிரதேச சிவிலியன்களுக்கு தேவையான உணவு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென மிரியம் யங் ((Miriam Young) ) தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் யுத்த வலயத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களுக்கு தொண்டாற்ற அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார். ஒபாமா அரசாங்கம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கையில் யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Wednesday, April 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.