[ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009] யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா படையினர் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை ஒன்றை நேற்றும் இன்றும் மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒரேவேளையில் நடைபெற்ற இந்தத் தேடுதல் நடவடிக்கையில் பெருந்தொகையான படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் நல்லூர், சுன்டிக்குளி பகுதிகளும் வடமராட்சியில் யாக்கரை, கிளவித் தோட்டம் பகுதிகளும் வலிகாமம் மற்றும் தென்மராட்சியின் பல பகுதிகளும் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டது. நல்லூர், சுண்டிக்குளி பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:00 மணியளவில் தொடங்கிய இந்தத் தேடுதல் நடவடிக்கை மாலை வரையில் தொடர்ந்தது. இந்த நடவடிக்கையின் போது குறிப்பிட்ட பகுதிகளில் வீதிப் போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டு, படையினர் வீடு வீடாகச் சென்று சோதனைகளை நடத்தினர். இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது வீடுகளில் இருந்து எவரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வடமராட்சிப் பகுதியிலும் இன்று அதிகாலை முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இளைய வயது ஆண்கள், பெண்கள் அருகே உள்ள கோவில்களுக்கு அழைக்கப்பட்டு படையினரால் கடுமையான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது யாராவது கைது செய்யப்பட்டனரா என்பது தொடர்பாக இதுவரையில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
Sunday, April 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.