Sunday, April 19, 2009

"சட்டத்தை மக்கள் தமது கைகளில் எடுக்கும் நிலை ஏற்படும்": ஜே.வி.பி. கடும் எச்சரிக்கை

[ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009] தமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ள போதிலும் அதற்கு காரணமானவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருக்கும் ஜே.வி.பி., இன்னும் ஒரு வாரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டத்தையும் ஒழுங்கையும் பொதுமக்கள் தமது கைகளில் எடுக்கும் நிலை ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் உள்ள வியாங்கொடவில் தமது கட்சி உறுப்பினர் ஒருவர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவித்த ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத், கொலையாளி அடைாயாளம் காணப்பட்டு அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் அதற்கான நடவடிக்கை எதனையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் ஒருவார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்டத்தையும் ஒழுங்கையும் மக்கள் தமது கைகளில் எடுத்துக்கொள்வார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.