[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009]
சிறிலங்காவின் பாரிய இனப்படுகொலையை தடுத்து நிறுத்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெருமளவில் இன்றும் வீதியில் இறங்கி முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கனடா ரொரரன்ரோவில் நள்ளிரவு முதல் மக்கள் கூடியள்ள நிலையில், பிரான்சிலம், சுவிசிலம் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
பரிசின் ரொக்கடரோ பகுதியில் இருந்து பேரணி ஒன்று றீப்பப்ளிக் சதுக்கத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, சுவிசின் பேர்ண் நகரிலுளள்ள நாடாளுமன்றம் முன்றலில் பெருமளவான மக்கள் குவியத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அவுஷ்திரேலியாவின் சிட்னி மாநகரின் மத்தியில் உள்ள மில்சன்ட் பொய்ன்ட் தொடருந்து நிலையத்துக்கு முன்பாக சிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் இன்று திங்கட்கிழமை மாலை 5:00 மணிக்கு நடைபெறவுள்ள அவசர ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த அவசர ஒன்றுகூடலை சிட்னி தமிழ் இளையோர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதில் அனைத்து சிட்னி வாழ் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
பரிஸ் ரொக்கட்டரோ பகுதியில் இடம்பெற்றுவந்த போராட்டம் றீப்பப்ளி்க் பகுதிக்கு மாற்றம்
பரிஸ் ரொக்கட்டரோ பகுதியில் இடம்பெற்றுவந்த போராட்டம் இன்று காவல்துறையின் அழுத்தம் காரணமாக றீப்பப்ளிக் சதுக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பங்கேற்கும் மக்களை றீப்பப்ளிக் சது்கத்திற்கு வருமாறு எற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சுவிசில் தமிழ் மக்களாள் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
இன்று காலை எரியத்தொடங்கியிருக்கும் எமது தாயகத்தின் போர்த்தீயை அணைப்பற்கு வீதியிறங்கிப் போராடுவதற்கு தமிழர்கள் எல்லோருக்கும் நாம் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம். இச் செய்தியைப் பார்த்த இத்தருணமே பேர்ன் பாராளுமன்றம் நோக்கிப் புறப்படவும். இல்லையேல் எம் இனம் அழியும். அங்கு களத்தில் எரிந்துகொண்டிருக்கும் மாபெரும் தீ தமிழர் வாழும் சர்வதேசம் எங்கும் பற்றி எரியட்டும். முடிவில் தமிழீழம் மலரட்டும். பேர்ன் பாராளுமன்றம் முன்பாக தொடர்ச்சியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதால் அனைவரும் இப்பொழுதே புறப்படுக.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.