[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009] இந்திய அரசாங்கத்தின் நிலைபாடு, முன்னெடுப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் ப. நடேசன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள மின்னஞ்சல் வழி செவ்வியிலேயே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். ' இந்தியா அவர்களின் உண்மையான நண்பனை அடையாளம் காணமல் மட்டுமின்றி, தமிழீழ மக்களுக்கு எதிரான செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறது" என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 'இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பு யுத்ததிற்கான அனைத்து வகையான யுத்த ஆயுதங்களையும் இந்தியா வழங்கி வருகிறது" எனவும் ப. நடேசன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்கள் பொருட்டும், யுத்த நிறுத்தம் குறித்தும் இந்திய மத்திய அரசாங்கம் எந்தவிதமான அர்த்தபுஷ்டியான செயற்பாட்டினையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் ஆகியோர், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, யுத்தம் குறித்து மகிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலேயே துரதிஸ்ட வசமாக பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவத்தினர் குண்டுத்தாக்குதல் நடத்தினர். என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் பொது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச் சாட்டு தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, ' உண்மையில் படையினரே இவ்வாறு பொது மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர். பொது மக்களை முன்னிறுத்தியே அவர்கள் தமது முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பொதுமக்கள் செறிந்துள்ள பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி, அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றனர்" என அவர் பதிலளித்துள்ளார். சர்வதேச சமூகம், வன்னி நிலவரத்தின் உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வது மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. எனினும் பொது மக்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் தற்போது மெதுவாக விழிப்படைந்து வருகின்றமையை காணக்கூடியதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ' அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படும் வரையில், தற்போதய நடப்பு நிலைக்கு முடிவு வரப் போவதில்லை. தமிழ் மக்கள் சுய நிர்ணயத்துடன் வாழக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றினை எட்டும் பொருட்டே தமிழீழத் தலைவர் பிரபாகரனும் போராடி வருகிறார். இதன் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக இருக்கின்றனர், இதனை தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, பொது மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள இந்த நிலையில், அனைத்துலக சமூகம் அக்கறையுடன் இது தொடர்பில் துரித செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் மீது அதீத அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப. நடேசன் தெரிவித்துள்ளார்.
Monday, April 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.