Friday, February 27, 2009

இலங்கை வான்படையின் விமானம் வன்னியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2009] இலங்கை வான்படையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்விமானம் வானில் வெடித்ததை பலபொதுமக்கள் கண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினர் இதனைச் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் விடுதலைப்புலிகள் இதுதொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவித அறிவித்தலும் வெளியிடவில்லை. முன்னதாக சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. வன்னி வான்பரப்பில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த சென்ற போது காணமல் போயுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி வெளிவந்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.