Friday, February 27, 2009

தே.மு.தி.க வள்ளிப்பட்டு கிராமத்தின் கிளை செயலாளர் தீக்குளித்துள்ளார்

[வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2009] சென்னை வேலூர் மாவட்டம், வானிணம்பாடியை அடுமுத்த வள்ளிப்பட்டு கிராமத்தின் தே.மு.தி.க கிளை செயலாளர் சிறிலங்காவில் போரில் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக்கோரி தீக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை இரவு 10.50 மணியளவில் தேமுதிக பிரமுகர் 36 அகவையுடைய சீனிவாசன் என்பவர் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்றிக் கொண்டார். 80 சதவீதம் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சிறுவயது முதல் விஜயகாந்தின் தீவிர ரசிகர். விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது, வள்ளிப்பட்டு கிராமத்தின் தேமுதிக கிளை செயலாளராக உள்ளார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்ப்படுகிறார்கள், இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களை தமிழக அரசு காக்க வேண்டும், எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்காக அதிகம் போராட வேண்டும், எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுவதில்லை. தேமுதிக இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும் வரையில் போராடிக்கொண்டிருக்க வேண்டும். நான் தீக்குளித்ததை விஜயகாந்திடம் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.