Friday, February 27, 2009

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவி உயிரிழந்துள்ளார்.

[வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2009]

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியைச் சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயின்றுவரும் மாணவி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீட முதலாம் ஆண்டில் கல்வி பயின்றுவரும் 23 அகவையுடைய தனபாலசிங்கம் நிருஷா என்ற மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பெண்கள் விடுதியில் சக மாணவிகளுடன் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அதிகாலை இடையில் தூக்கத்திலிருந்து எழுந்து வெளியில் சென்ற மாணவி மீண்டும் படுக்கை அறைக்கு திரும்பவரவில்லை. பின்னர் தேடுதல் நடாத்திய போது கழுத்தில் துப்பட்டாவினால் சுற்றியபடி மின்விசிறியில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டள்ளார். சடலத்திற்கு அருகிலிருந்து கடிதம் ஒன்றும் மீட்க்கப்பட்டள்ளதாக கூறப்படுகின்றது. அதில் தன்னுடைய அப்பா, அம்மாவுடன் கடந்த 6மாதங்களாக எவ்வித தொடர்வுமில்லை, என்னால் தனியாக வாழ முடியாது எனவும், என்னை பார்ப்பதற்கு யாரும் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் பிரியா எனும் மாணவி இவ்வாறு மன அழுத்தத்துடன் காணப்படுவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். நிருஷாவின் சடலம் நீதிவான் மற்றும் காவல்துறையினர் பார்வையிட்ட பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரேத பரிசோதனையின் பின்னர் வவுனியாவில் உள்ள அவரின் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவரின் கொலையிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் உரிய விசாரணை நடவாத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு கடந்த 23ம் திகதி பெண்கள் விடுதி மேற்பார்வையாளர் மாரிமுத்து பிறேமலதா இவ்வாறு மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார் எனினும் அதனை தற்கொலை என பல்கலைக்கழ நிர்வாகம் மூடிமறைத்த நிலையில் மீண்டும் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டதுடன் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டள்ளதாகவம் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.