[புதன்கிழமை, 18 பெப்ரவரி 2009] ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து நாளை அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் நுழைவாயில் முன்பாக கறுப்புத் துணி கட்டி முழக்க போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம், அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் திருமலை, தமிழக மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளர் செஞ்சி ரவி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைவர் கணேசன் உட்பட பல்வேறு மாணவர் அமைப்பின் பேராளர்கள் இதனைத் தெரிவித்தனர். இலங்கையில் சிங்கள இனவெறிப் சிங்களப் படை தமிழினப் படுகொலையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் நாள்தோறும் இறந்து வருகின்றனர். இந்த அழிவிலிருந்து தமிழ் மக்களைக் காக்கவும், அங்கு போர் நிறுத்தம் கொண்டுவரவும், சிறிலங்காவுக்கு வழங்கி வரும் ஆயுத உதவிகளை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி நாளை அனைத்துக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு முன்பு கறுப்புத்துணி கட்டி வாயில் முழக்கப் போராட்டம் நடத்தப்போவதாகவும், நாளை அனைத்து நாட்டு தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்து மனுக்கொடுத்து இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஆதரவு திரட்ட உள்ளோம்' என்று அவர்கள் தெரிவித்தனர். நாளை மறுநாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடத்த உள்ளோம். இந்தப் பேரணியில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை அனைத்துலக போர்க் குற்றவாளியாக இந்தப் பேரணி வலியுறுத்த உள்ளதாக அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Wednesday, February 18, 2009
தமிழினப் படுகொலையைக் கண்டித்து கறுப்புத் துணி கட்டி போராட்டம்: மாணவர்கள் கூட்டமைப்பு
Wednesday, February 18, 2009
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.