Wednesday, February 18, 2009

ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு கண்டனம்: வழக்கறிஞர்களின் உண்ணாநிலை போராட்டத்தினால் உயர்நீதிமன்ற விசாரணை பாதிப்பு

[புதன்கிழமை, 18 பெப்ரவரி 2009] ஈழத்தில் இனப் படுகொலையைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். வழக்கறிஞர்கள் போராட்டத்தால் சென்னை உயர்நீதிமன்றப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இலங்கை இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடந்த மாதம் முதல் நாள்தோறும் ஒரு போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சமூக நீதி வழக்கறிஞர்கள் பேரவையின் சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பாலு தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின்போது சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகச் செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகங்களையும், வட இந்திய தொலைக்காட்சிகளையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செய்தி வெளியிட்டு வரும் "தினமலர்" நாளிதழை வழக்கறிஞர்கள் தீயிட்டு எரித்தனர். மேலும், இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களைச் சிங்கள படையினர் தாக்குதல் நடத்தி வருவதால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த நிழற்படங்களும் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் வைக்கப்பட்டிருந்தன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.