Saturday, February 14, 2009

இனஅழிப்பை நிறுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ள பிரிட்டனின் சமாதான முயற்சியை வரவேற்கின்றோம்: தமிழீழ விடுதலைப்புலிகள்

[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2009] இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இனஅழிப்பு, மனித அவலங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு, பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான டெஸ் பிறவுணை இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் நியமித்ததை விடுதலைப் புலிகள் வரவேற்கின்றோம். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிநிதி எஸ்.பத்மநாதன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான விசேட பிரதிநிதி டெஸ் பிறவுணுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதுடன், அங்கு நிலவும் மனித அவலங்கள் குறித்து கவனம் செலுத்தி சிறிலங்கா அரசின் இனஅழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தவேண்டிய தார்மீகப் பொறுப்பு பிரித்தானிய அரசாங்கத்திற்கு உள்ளதென்றும், ஆனால் பிரித்தானிய அரசினால் தற்போது முனெடுக்க இருந்த சமாதான முயற்சிகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டிய அவர், 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையை விடுதலைப் புலிகள் இன்னமும் மதிப்பதாகவும், இம்முரண்பாட்டிற்கு சமாதானத் தீர்வொன்றைக் காண்பதற்கு தாம் இன்னமும் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானியா இலங்கைக்கான விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்தமையானது இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இனமுரண்பாட்டிற்கு அரசியல் தீர்வு காண உதவும் என்பதோடு, வன்னிப் போர்ப் பிராந்தியத்தில் அகப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு ஆறுதலளிக்கும் ஒன்றாகவும் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் ஒருமுறை சமாதான விரும்பிகள் யார் என்பதை புலிகள் பிரித்தானிய அரசுக்கு தெள்ளத் தெளிவாக்கியுள்ளனர் என அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.