Saturday, February 14, 2009

இலங்கையில் வன்முறைகளை விசாரிக்க அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, செனட்குழு

[சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2009] இலங்கையில் குறிப்பாக வன்னி பகுதியில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை விசாரிக்க அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, செனட்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பிராந்திய ரீதியிலான துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் ஊடாக எதிர்வரும் 24ம் திகதி இலங்கை விவகாரம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய வலயங்களுக்கு பொறுப்பான செனட்டர் ரொபர்ட் கெர்ஸி தெரிவித்துள்ளார். முதலில் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக கெர்ஸி மேலும் தெரிவித்துள்ளார். வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை எடுக்கக் கூடிய முழுமையான அதிகாரம் இக்குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.