Friday, February 27, 2009

புதுக்குடியிருப்பில் கடும் சமர் - இராணுவத்திற்கு பேரிழப்பு

[வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2009] புதுக்குடியிருப்பை ஆக்கிரமிக்கும் சிறீலங்காவின் நடவடிக்கை பெரும் அழிவுகளைச் சந்தித்துள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் புதுக்குடியிருப்பை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சுமார் 1500 வரையான படையினர் கொல்லப்பட்ட நிலையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற சண்டையில் மேலும் நூற்றுக் கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன், சுமார் 15 கிலோ மீற்றர் படையினர் பின் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து செய்திகள் எவையும் வெளிவரவில்லை. இதுவேளை, முழுமையான போர் செய்திகள் தணிக்கையில் உள்ள நிலையில் சிறிலங்கா தரப்பில் இருந்தும் இது தொடர்பான தகவல்கள் எவையும் வெளிவரவில்லை. எனினும் உலங்குவானூர்திகள் களமுனைகளில் அவசரமாக இறங்கி ஏறுவதாகவும், கொழும்பில் அவசர வாகனங்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவருகின்றது. இதேவேளை, இன்றைய தாக்குதலின் போது சிறிலங்கா வான் படையின் கிபிர் விமானம் ஒன்றும் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.