Monday, February 09, 2009

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து புதுவை கடற்றொழிலாளர்கள் கறுப்புக்கொடி போராட்டம்

[திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2009] ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இதில் மத்திய அரசு தலையிட்டு தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தும் புதுவையில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் கறுப்புகொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரியில் உள்ள கடற்கரை ஓரத்தில் உள்ள 15 கிராமத்தில் உள்ள கடற்றொழிலாளர்களும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கடற்றொழிலாளர் கிராம பஞ்சாயத்து சார்பில் கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வம்பாகீரப்பாளையத்தில் கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதேபோல் வீராம்பட்டினம் கடற்றொழிலாளர் பஞ்சாயத்து மற்றும் பொதுமக்கள் சார்பில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி அமைதி ஊர்வலம் நடத்தினர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.