[புதன்கிழமை, 26 நவம்பர் 2008,] சிறிலங்காவின் சிங்கள புராதன நகரமான அநுராதபுரத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் நான்கு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அநுராதபுரம் ஹொரவப்பொத்தானையில் செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என இராணுவப் பேச்சாளர் உதய நாணயகார தெரிவித்தார். இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே காவல்துறையினர் கூடி நின்ற இந்த இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, கொல்லப்பட்ட நான்கு பேரும் அப்பாவி தமிழ் இளைஞர்கள் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். தொழில் நிமித்தம் காரணமாக இந்த இளைஞர்கள் ஹொரவப்பொத்தானையில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இச்சம்பவத்தினையடுத்து அநுராதபுரத்தில் பதற்றம் நிலவியதுடன் இன்றிரவு மதவாச்சி ஊடான கொழும்புக்கான போக்குவரத்தும் தடைப்பட்டது.
Wednesday, November 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.