[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படையின் லெப். கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றலியன் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முல்லைத்தீவின் கிழக்கு பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 59 ஆவது படையணி நகர்வை மேற்கொண்டிருந்தது. இப்படையணியினர் மீது விடுதலைப் புலிகள் கடந்த 1 ஆம் நாள் மேற்கொண்ட தாக்குதலின் போது படையினர் தமது முன்னனி நிலைகளை 3 கிலோ மீற்றர் தொலைவுக்கு பின்நோக்கி நகர்ந்திருந்தனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் லெப். கேணல் சமிந்த லமகவே தலைமையிலான 7 ஆவது கெமுனுவோச் பற்றலியன் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளது. இச்சமரின் போது மேஜர் கமல் நாணயக்கார உட்பட 33-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. உக்கிரமான சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது கோப்ரல் புஷ்பகுமார என்ற சிப்பாய் கிளைமோர் குண்டு ஒன்றுடன் வெடித்து சிதறியதாகவும் படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது. படையினரை ஒட்டுசுட்டான் பகுதிவரை பின்தள்ளுவதே விடுதலைப் புலிகளின் நோக்கம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, February 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.