[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009] அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதிகாரி ஒருவர் உட்பட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 12-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது: கஞ்சிகுடிச்சாறு பகுதியில் நேற்று சனிக்கிழமை பௌத்த விகாரை ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு விழா பெருமெடுப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்த போது பிற்பகல் 2:40 நிமிடமளவில் பாரிய சத்தத்துடன் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உட்பட 12-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிலர் காயமடைந்துள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினருக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். குண்டுவெடிப்பினை அடுத்து அப்பகுதியில் பாரிய தேடுதலை சிறிலங்கா படையினர் நடத்தியதுடன் பொதுமக்கள் மீதான கெடுபிடிகள் பாரியளவில் காணப்பட்டன. குண்டுவெடிப்புச் சத்தம் பல மைல் தூரத்துக்கு அப்பாலும் கேட்டதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sunday, February 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.