Tuesday, November 25, 2008

கிழக்கில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருகின்றன: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

[புதன்கிழமை, 26 நவம்பர் 2008,] கிழக்கு மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த அரசு உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது: கிழக்கில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால், கிழக்கு மாகாணத்தில் படுகொலைகள், கடத்தல்கள் என்பன அதிகரித்து வருகின்றன. எமது விசாரணகளில் கடந்த செப்ரெம்பர் மாதம் தொடக்கம் அங்கு நீதிக்குப் புறம்பான 30 படுகொலைகள் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அண்மைய சம்பவம் ஒன்றில் கடந்த ஓக்ரோபர் மாதம் நடைபெற்ற சுற்றிவளைப்பின் போது சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் கடற்கரையில் சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடலில் துன்புறுத்தப்பட்டதற்கான அடையாளங்களும் உள்ளன. எனினும், கொல்லப்பட்ட இருவரும் சாதாரண உடையில் வந்தவர்களால் காவல் நிலையத்தில் இருந்து நள்ளிரவு வேளை அழைத்துச் செல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. திருகோணமலையில் கோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருக்கள் பல காவலரண்களை கொண்ட உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் வைத்து பகல் வேளை சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். செப்ரெம்பர் மற்றும் ஒக்ரோபர் மாதங்களில் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பகுதிகளில் இருந்து 30-க்கும் அதிகமானோர் கடத்தப்பட்டுள்ளனர். துணை இராணுவக் குழுவினரே அவர்களை கடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த மனித உரிமை மீறல்களுக்கு அரசின் ஆசீர்வாதம் உண்டு என கிழக்கு மாகாண மக்களில் பலர் நம்புகின்றனர் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.