[புதன்கிழமை, 25 யூன் 2008] இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய நாடுகள் சபை பிரயோகிக்க வேண்டும் என்று உலக ஊடகவியலாளர்கள் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றன. 29 உலக ஊடக அமைப்புக்கள் இணைந்து விடுத்துள்ள இக்கோரிகை தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பன் கீ மூனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்காவில் அரசாங்கத்தினை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை தேசத்துரோகிகள் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் விபரித்துள்ளது. எனவே ஆபத்தில் உள்ள ஊடகவியலாளர்களை சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து காப்பாற்றும் அழுத்தங்களை ஐ.நா மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியான மிரட்டல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இது அவர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது. ஐ.நா.வின் 1738 ஆவது அதிகாரத்தை மதிக்கும் படியும், பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விமர்சனங்களை மீளப்பெற வேண்டும் எனவும் ஐ.நாவில் உறுப்புரிமை கொண்டுள்ள எல்லா நாடுகளும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் இந்நடவடிக்கைகள் ஊடகவியலாளர்களின் சுதந்திரங்களை அதிகம் பாதித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த வாசகம் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, June 25, 2008
"ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான அழுத்தத்தினை ஐ.நா. பிரயோகிக்க வேண்டும்"
Wednesday, June 25, 2008
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.