Wednesday, June 25, 2008

இந்தியா தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருப்பதே நல்லது - ஜேவிபி

[புதன்கிழமை, 25 யூன் 2008]

இந்தியா தனது வேலைகளைப் பார்த்துக் கொண்டு இலங்கை விடயத்தில் தலையிடாமல் இருப்பதே எமக்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் நல்லது என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

அண்மையில் இந்தியக்குழு ஒன்று விசேடமாக இலங்கை வந்து ஜனாதிபதி உட்பட பல உயர்மட்டத்தினரை சந்தித்திருப்பதுடன், சம்பந்தன், டக்ளஸ் தேவனந்தா உட்பட்ட தமிழ்த் தலைவர்களையும் சந்தித்துள்ளர். இது சார்க் மாநாட்டை ஒட்டிய ஒரு முன்னேற்பாடுகள் குறித்து பேசுவதற்கான வருகையே என இந்திய, இலங்கை அரசாங்க தரப்புக்கள் சொல்வதை விட மிக முக்கியமான பல விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்டபாக கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் மேலும் தெரிவிக்கையில்,

பிராந்திய வல்லாதிக்கம் என்ற பெயரில் இந்தியா, இலங்கை விவகாரங்களில் மூக்கை நுளைப்பதை இனியும் அனுமதிக்கமுடியாது. அப்படி இன்னும் ஒரு தடவை அவர்கள் மூக்கை நுளைக்க நடவடிக்கைகளை எடுப்பார்களேயானால் முளையிலேயே அந்த நடவடிக்கையினை தடுத்தாக வேண்டும்.

இந்தியா மட்டும் இன்றி நோர்வேயோ அல்லது பிற நாடுகளோ எமது நாட்டு விடயங்களில் தலையிடுவதை அனுமதிக்கமுடியாது.

இங்கு ஒரு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நடந்துவருகின்றது. விரைவிலேயே பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்பட்டு சகல மக்களும் சுமூகமாக வாழும் நிலை ஒன்று உதயமாகிவிடும், இந்த நிலையில் அதைக் குழப்புவதற்கு முயலும் எந்தவொரு சக்தியையும் இந்த நாட்டில் காலூன்ற விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அரசாங்கம் இந்தியக் குழு எதற்காக இங்கு வந்தது என்பதை மூடி மறைக்காமல் வெளிப்படையாக மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.