Wednesday, June 25, 2008

தகுதி இழந்த நாடுகளின் பட்டியலில் மீண்டும் சிறிலங்கா

[புதன்கிழமை, 25 யூன் 2008] வெளிவிவகார கொள்கைகள் மற்றும் அமைதிக்கான நிதியம் மேற்கொண்ட தரப்படுத்தலில் உலகில் தகுதி இழந்த நாடுகளின் பட்டியலில் மீண்டும் சிறிலங்கா உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகில் உள்ள நாடுகளில் 60 நாடுகள் தகுதி இழந்த நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 20 ஆவது இடத்தில் சிறிலங்கா உள்ளது. சோமாலியா முதலாவது இடத்தில் உள்ளது. எதிர்பாராத உணவு நெருக்கடிகள், மற்றும் பேரனர்த்தம் போன்றவை ஏற்படும் போது தகுதி இழந்த நாடுகளே அதிகம் பாதிக்கப்படும். 12 காரணிகளை முன்வைத்தே இந்த தரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.