"சிவத்தமிழ்ச் செல்வி" தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் சமூக சேவகியாகத் திகழ்ந்த தங்கம்மா அப்பாக்குட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.
"தமிழ்ப் பண்டிதை" என்று ஈழத் தமிழர்களால் அழைக்கப்பட்ட தங்கம்மா அப்பாக்குட்டி முறைப்படி தமிழ் கற்று ஆசிரியையாக இருந்தவர். திருமணம் செய்து கொள்ளாமல் சமூக சேவகியாகவே வாழ்ந்தவர். நூலகம் ஒன்றைத் தொடங்கிச் சிறந்த நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்த அவரின் இழப்பு ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரது பிரிவால் வாடும் தமிழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.