[புதன்கிழமை, 18 யூன் 2008,] வவுனியா, மணலாறு, மன்னார், நாகர்கோவில் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய பல்வேறு தாக்குதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் படு காயமடைந்தனர். இது தொடர்பில் சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மன்னார் மன்னார் காயமோட்டை என்ற இடத்தில் நேற்று பிற்பகல் 2:45 மணிக்கு நடந்த தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். முன்னதாக அதே பகுதியில் காலை 8:20 மணிக்கு நடந்த தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். பெரியமடுவில் நேற்று பிற்பகல் 3:25 மணிக்கு விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். வவுனியா நாவற்குளத்தில் நேற்று முற்பகல் 11:30 மணிக்கு நடந்த தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஓமந்தையில் உள்ள படை முகாமின் மீது நேற்று இரவு 8:55 மணிக்கு விடுதலைப் புலிகளின் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 படையினர் காயமடைந்தனர். இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர். மற்றவர் அங்கு பணி புரிந்தவர். மணலாறு ஜனகபுரப் பகுதியில் நேற்று மாலை 4:20 மணிக்கு நடந்த தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். அதே பகுதியில் பிற்பகல் 12:25 மணிக்கு நடந்த தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். அத்தாவட்டுணவேவ பகுதியில் நேற்று முற்பகல் 11:35 மணிக்கு நடந்த தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். ஆண்டான்குளத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். நாகர்கோவில் யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் களத்தில் நேற்று மாலை 6:30 மணிக்கு விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
Wednesday, June 18, 2008
புலிகளின் தாக்குதல்களில் 7 சிறிலங்காப் படையினர் பலி: 8 பேர் படுகாயம்
Wednesday, June 18, 2008
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.