[புதன்கிழமை, 25 யூன் 2008] ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மா விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்படப் போவதாக அறிவித்துள்ளார். ஜே.வி.பியுடன் கடந்த சில நாட்களாக முரண்பட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மா, தனது வாகனங்களை ஜே.வி.பியினர் கடத்தி வைத்திருப்பதாக முறையிட்டிருந்தார். அத்துடன் ஜே.வி.பியினரின் தாக்குதல் அச்சத்தால் தனது வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தான் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்படப் போவதாக ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனை தேசிய விடுதலை முன்னணி வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
Wednesday, June 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.