Wednesday, June 25, 2008

நெடுங்கேணி அமுக்க வெடித்தாக்குதலில் மாணவன் படுகொலை

[புதன்கிழமை, 25 யூன் 2008,]


வவுனியா மாவட்டத்தில் உள்ள நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய அமுக்க வெடித்தாக்குதலில் மாணவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

நெடுங்கேணி குளவிசுட்டான் பகுதியில் உள்ள அன்னதேவன்மடுவடியில் இன்று புதன்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் அமுக்க கண்ணிவெடித்தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதல் பொதுமக்கள் சென்ற உழவூர்தி மீது நடத்தப்பட்டது.

இதில் மாணவனான சேனாதிராசா செந்தூரன் (வயது 16) என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.

மாணவனின் தந்தையான வேலுப்பிள்ளை சேனாதிராசா, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான விநாயகமூர்த்தி பிரதீபன் (வயது 26), விநாயகமூர்த்தி பிரதாபன் (வயது 16), விநாயகமூர்த்தி பிரகாஸ் (வயது 15) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.