Wednesday, June 25, 2008

அந்திரக்ஸ் பீதியால் சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடல்

[புதன்கிழமை, 25 யூன் 2008] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று புதன்கிழமை முற்பகல் முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரக வளாகத்தில் கிடந்த பொதி ஒன்றுக்குள் மர்மமான தூள் இருந்தததாக தெரிவிக்கப்படுகிறது. பொதிக்குள் இருந்த தூள் அந்திரக்ஸ் தூளாக இருக்கலாம் என்ற அச்சத்திலேயே தூதரகத்தை இழுத்து மூடியுள்ளதாக கூறப்படுகின்றது. மேற்படி தூளை பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே மீண்டும் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்புச் செயலராக கடந்த சில நாட்களுக்கு முன்னரே லெப்.கேணல் லோறன்ஸ் ஏ.சிமித் நியமிக்கப்பட்டிருந்தார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நேற்று அவர் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.