சிறிலங்கா இராணுவம் மோதல்களில் வெற்றி பெற்று வருவதனால் எமது பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இந்தியா சென்றிருக்கும் கேகலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்திருப்பதாவது:
தற்போது இந்தியா என்ன செய்கின்றதோ அதனையே அது தொடர்ந்து செய்ய வேண்டும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றுவதற்கு கால அட்டவணை போட முடியாது.
விடுதலைப் புலிகளிடம் இரண்டரை மாவட்டங்கள் உள்ளன. அவர்கள், தற்போது இரண்டரை மாவட்டங்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சிறிலங்கா இராணுவம் முற்றுகையிட்டு வருகின்றது என்றார் அவர்.
1980-களின் பிற்பகுதியில் இலங்கை இனப்பிரச்சினையில் தலையிட்ட இந்தியா கசப்பான அனுபவங்களை பெற்றுக்கொண்டதுடன், இலங்கை இனப்பிரச்சினையில் இருந்து ஒதுங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது என இந்திய தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.