Wednesday, June 18, 2008

புலிகளின் தாக்குதல் அச்சம்: யாழில் சரத் பொன்சேகா

[புதன்கிழமை, 18 யூன் 2008,]


யாழ்ப்பாண குடாநாடு மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப்போவதாக எழுந்துள்ள அச்ச நிலையைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். குடாநாட்டுக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி சென்றுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யாழ். குடாநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பென்சேகா, படையினரை உயர் விழிப்பு நிலையில் இருக்குமாறு பணித்துள்ளார்.

யாழ். மாவட்ட கட்டளைத் தலைமையகத்தில் டிவிசன் கட்டளைத் தளபதிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோரைச் சந்தித்து கள நிலமைகள் தொடர்பாகவும் அவர் கலந்துரையாடியுள்ளார்.

குடாநாட்டைச் சூழ இரு தரையிறக்கத் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் அண்மையில் நிகழ்த்தியதனைத் தொடாந்தே சரத் பொன்சேகா அங்கு அவசர பயணத்தினை மேற்கொண்டார்.

உள்ளகப் பாதுகாப்புக்கள், தற்காப்பு நடவடிக்கைகள், எதிர்த்தாக்குதல் உத்திகள், விடுதலைப் புலிகளின் ஊடுருவல்கள் என்பவற்றை ஆராய்ந்த சரத் பென்சேகா, மேலதிக பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

பலாலி வான் படைத் தளத்தில் வந்திறங்கிய சரத் பொன்சேகாவை, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி வரவேற்பு வழங்கினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.