[செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2007] தமிழகம் இராமேஸ்வரம் கடற்பரப்பில் இன்று அதிகாலை அத்துமீறி நுளைந்த சிறிலங்கா கடற்படைப்படகுகள் இராமேஸ்வரம் கடலில் தொழிலில் ஈடுபட்டிருந்த 50,ற்கும் மேற்பட்ட தமிழக மீன்பிடி படகுகள் மீது துரத்தித்துரத்தி சரமாரியாகச் துப்பாக்கிச்சூட்டை நடத்தின இதில் மீனவர்; ஒருவர் படுகாயமடைந்தார்;. இதனால் இராமேஸ்வரத்தில் பதற்றநிலை நீடிக்கிறது காவல்துறையினர் குவிக்கப்படடனர். மேலும் செய்தி...... மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மீன்பிடி தொழிலே முக்கிய தொழிலாக உள்ளது. இதனால் இங்கு தினந்தோறும் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். நடுக்கடலுக்குள் மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தாக்குவதும், துப்பாக்கியால் சுடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் பெரும் பீதியிலேயே உள்ளனர். இன்று அதிகாலையிலும் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று காலை மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 1 மணி அளவில் ஒரு பெரிய கப்பல் மற்றும் குட்டி கப்பல் ஒன்றும் ராமேசுவரம் மீனவர்களை நோக்கி வந்தது. அதில் இலங்கை கடற்படையினர் இருந்தனர். மீனவர்கள் பக்கம் வந்ததும் இலங்கை கடற்படையினர் அதிநவீன ஹடார்ச் லைட்' மூலம் இந்த இடத்தை விட்டு செல்லுமாறு எச்சரித்தனர். உஷார் ஆன மீனவர்கள் வலைகளை தங்களது படகுகளில் இழுத்து போட்டனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆவரணம் என் பவருக்கு சொந்தமான படகை (படகு எண் 978) நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அந்த படகில் ஆவரணத்தின் மகன் கிருபைராஜ் மற்றும் சூசை அந்தோணி, ரூபன் ஆகியோர் இருந்தனர். துப்பாக்கியால் சுடுவதை அறிந்ததும் 3 பேரும் லாவகமாக படகுக்குள் பதுங்கினர். அப்போது கிருபைராஜ் படகினை ஓட்ட முயன்றார். இதனை பார்த்த கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கிருபைராஜின் இடது தொடையில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படகுக்குள் சுருண்டு விழுந்தார். உடனே மீனவர்கள் தங்களது வலைகளை வெட்டி விட்டு கரையை நோக்கி படகை செலுத்தினர். ஆனாலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட படகுகள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதிர்ச்சி அடைந்த ராமேசு வரம் மீனவர்கள் தங்களது படகுகளில் வேகமாக கரையை நோக்கி வந்தனர். கரைக்கு வந்ததும் துப் பாக்கி சூடு சம்பவம் காட்டு தீ போல பரவியது. இதனால் ராமேசுவரத்தில் பெரும் பதட்டம் நிலவியது. துப்பாக்கி குண்டு பாய்ந்த கிருபைராஜ் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்ததும் ராமேசு வரம் துணை போலீஸ் சூப் பிரண்டு சுப்பிரமணியன், தாசில்தார் தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் சென்றனர். அவர்கள் நடந்த விவரம் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்த படகுகளையும் பார்த்தனர். ராமேசுவரத்தில் பதட்டம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Tuesday, November 13, 2007
சிறிலங்கா கடற்படை சரமாரியாக சூடு இராமேஸ்வரத்தில் பதற்றம் காவல்துறையினர் குவிப்பு
Tuesday, November 13, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.