Tuesday, November 13, 2007

விடுதலைப் புலிகளுக்கு யூனிசெஃப் நிதியுதவி: விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

[செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2007]


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு யுனிசெஃப் அமைப்பானது நிதியுதவி வழங்கி வருவதாக ஜே.வி.பியின் நாடளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறார்களின் உரிமைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய யுனிசெஃப் அமைப்பானது தனது பணியைச் செய்வதனை விடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை 10 கோடியே மூன்று இலட்சத்து 784 ரூபாவை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

தமிழர் புனர்வாழ்வு கழகம் என்ற விடுதலைப் புலிகளின் அமைப்ப ஊடாகவே இந்நிதி கையளிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே இது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். யுனிசெஃப் யாருக்கு நிதி வழங்கியிருக்கின்றது என்பதனை ஆராய வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது.

யுனிசெஃப் அமைப்பில் பணியாற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கொழும்பில் இருக்கின்றார். அவரே இத்தனைக்கும் காரணகர்த்தாவாக செயற்படுகின்றார். அத்துடன் கொழும்பில் இருந்தவாறு விடுதலைப் புலிகளுக்காக உளவு பார்க்கின்றார். நிதியுதவி மட்டுமன்றி வாகனங்கள் போன்றவற்றையும் யுனிசெஃப் விடுதலைப் புலிகளின் பாவனைக்கு வழங்கியிருக்கின்றது.

கிளிநொச்சியில் உள்ள யுனிசெஃப் அலுவலகத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்களே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.