[செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2007] பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களிற்கு வணக்கம் செலுத்தும் வகையில் அமைதிப்பேரணியாய் செல்ல முற்பட்டு கைதாகியுள்ள தமிழ்த்தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், மா.தி.மு.க.பொதுச்செயலர் வைகோபாலசாமி உள்ளிட்ட அனைவரையும் நிபந்தனையின்றி உடனே விடுவிக்கும் படி தமிழக முதலமைச்சரிடம் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் மு.கருணாநிதி அவர்களிற்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில்... ஈழ மண்ணில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட தமிழ் போராளிகளுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த இயலாது என்னும் நிலையில் தமிழகத்தில் அவர்களது திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவதும், இரங்கல் அணிவகுப்பு, கூட்டங்களை நடத்துவதும் மனித தேயத்தின் அடிப்படையிலான செயல்களே ஆகும். ஆனால் கடந்த 11ஆம் திகதி வேலூரில் நடைபெற இருந்த இரங்கல் கூட்டமும் நேற்று சென்னையில் நடைபெற இருந்த பேரணியும், இன்று மதுரையில் நடைபெற இருந்த இரங்கல் கூட்டமும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் தமிழ்மக்களின் மனிதநேய உணர்வுகளை நசுக்குவதாக அமைந்துள்ளது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதைப்போல தமிழக முதல்வருக்கு இயல்பாகவே அமைந்துள்ள தமிழ் இனமான உணர்வும், மனிதநேய உணர்வும் இரங்கல் கவிதையாக வெளிப்பட்டதை உலகறியும், மனிதநேய உணர்வுள்ள முதல்வர், இரங்கல் ஊர்வலம் நடத்த முயன்றதாக கைதுசெய்யப்பட்டுள்ள பழ.நெடுமாறன், வைகோ, பஷீர் அகமது உள்ளிட்ட அனைவரையும் நிபந்தனை ஏதுமின்றி உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அமைதியான முறையில் நடைபெறும் இரங்கல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கவும் வேண்டும். இவ்வாறு முதல்வருக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
Tuesday, November 13, 2007
‘நெடுமாறன், வைகோவை உடனே விடுதலை செய்க’ முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை.
Tuesday, November 13, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.