[ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2007] ஜே.வி.பி.யை உடைத்து அதில் ஒரு பிரிவினரின் வாக்குகளின் மூலம் தமது வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. வரவு-செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி. வாக்களித்தால் அரசாங்கம் தோல்வியடைய வாய்ப்புள்ளது. அக்கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்து வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான "உடைப்பு" நடவடிக்கைளை மகிந்தவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான தகவல்கள் வெளியானதையடுத்து கருத்து தெரிவித்த ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த, தமது கட்சியை பிளவுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு தமது கட்சி தேவையான நேரத்தில் பதிலளிக்கும் என்றார். எனினும் ஜே.வி.பி.யை பிளவுபடுத்தி வரவு-செலவுத் திட்டத்தை வெல்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கி விட்டதாக அண்மையில் தன்னைச் சந்தித்த ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அநுர குமார, விஜித ஹேரத் ஆகியோர் பகிரங்கமாக எதனைக் கூறிவந்தாலும் அவர்கள் முடிவெடுக்கும்போது அனேக விடயங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது என்றும் பசில் ராஜபக்ச கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Sunday, November 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.