Sunday, November 11, 2007

கோவையில் அரசியல் கட்சிகள்- இயக்கங்களின் எழுச்சிமிக்க வீரவணக்க ஊர்வலம்

[ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2007] பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழ்நாட்டின் கோவையில் அரசியல் கட்சிகளும் பல்வேறு இயக்கங்களும் இணைந்து உணர்வெழுச்சியான வீரவணக்க ஊர்வலத்தை தற்போது நடத்தி வருகின்றன. கோவை சிவானந்தா காலனி மின்வாரியம் அலுவலகம் முன்பாக சனிக்கிழமை மாலை 5:15 மணிக்கு தொடங்கிய இந்த வீரவணக்க ஊர்வலத்துக்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார். இந்த ஊர்வலத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கக்கத்தின் தியாகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவிந்தராசு, பாட்டாளி மக்கள் கட்சியின் அனுபவ் ரவி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சுசி கலையரசன், தமிழ்நேயம் அமைப்பின் கோவை ஞாநி, பெரியார் திராவிடர் கழக ஆட்சிக் குழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி, ஆதித்தமிழர் பேரவையின் பழ. நீலவேந்தன், உலகத் தமிழர் பேரமைப்பின் ஆ.காந்தி, புரட்சிகர இளைஞர் முன்னணியின் தமிழ்க்கனல், ஆதித் தமிழர் விடுதலை முன்னணியின் இரவிக்குமார், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தமிழ்நேயம், சமூக நீதி பதிப்பகத்தின் தமிழ்ச்செல்வி, மக்கள் உரிமைக் குழுவின் பொன். சந்திரன், மக்கள் கண்காணிப்புக் குழுவின் கருப்பசாமி, சட்டக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் மகேந்திரன், ஜீவா, நிக்கோலஸ் மற்றும் இந்த அமைப்புகள்- கட்சிகளின் தோழர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர். ஊர்வலத்தில் எழுப்பப்பட்டு வரும் முழக்கங்கள்: அழிவதில்லை அழிவதில்லை மாவீரர்கள் அழிவதில்லை அழிவதில்லை வீழ்வதில்லை வீழ்வதில்லை வீரமறவர்கள் வீழ்வதில்லை வீழ்வதில்லை கொடுக்குதே! கொடுக்குதே! இந்திய அரசு கொடுக்குதே! நம்ம வரிப்பணத்தில் கொடுக்குதே! சிங்களவனுக்கு கொடுக்குதே! விமானங்கள் கொடுக்குதே ஆயுதங்கள் கொடுக்குதே! தமிழனை கொல்ல கொடுக்குதே! கொடுக்காதே கொடுக்காதே! இந்திய அரசே! கொடுக்காதே! சிங்களவனுக்கு கொடுக்காதே விமானங்கள் கொடுக்காதே ஆயுதங்கள் கொடுக்காதே எங்கள் தமிழரைக் கொல்ல கொடுக்காதே! அங்கீகரி! அங்கீகரி! தமிழீழத்தை அங்கீகரி! இந்திய அரசே அங்கீகரி! இந்திய அரசே அங்கீகரி! தமிழீழத்தை அங்கீகரி! புதைக்கவில்லை புதைக்கவில்லை தமிழ்ச்செல்வனை புதைக்கவில்லை தமிழ்ச்செல்வனை புதைக்கவில்லை விதைக்கிறொம் விதைக்கிறோம் தமிழீழ விடுதலைக்காக விதைக்கிறோம் தமிழீழ விடுதலைக்காக விடுதலைக்கிறோம் வீரவணக்கம் வவீரவணக்கம் வீரமறவர் தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம! வீரவணக்கம் வீரவணக்கம் தமிழ்ச்செல்வனுடன் வீரமரணமடைந்த வீரமரறவர்களுக்கு வீரவணக்கம்! ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.