[செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2007] வடபோர்முனைப் போராளிகளுக்கு கிளிநொச்சி பொதுமக்கள் சமைத்த உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்கினர். வர்த்தக சங்கத்தினர், சந்தை வர்த்தகர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், தேசிய போர் எழுச்சிக் குழு ஆகியவற்றின் சார்பில் இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. கிளிநொச்சி அரசியல்துறைப் போராளி போசன் தலைமையில் திங்கட்கிழமை பிற்பகல் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வட போர்முனைத் தளபதிகளில் ஒருவர் ஜெரி தனது ஆற்றிய உரை: களமுனைகளைப் பொறுத்தமட்டில் வடபோர்முனையாக இருந்தாலும் சரி ஏனைய போர் முனைகளாக இருந்தாலும் சரி புதிய போராளிகளின் தீவிர உச்சகட்ட துணிவும் தந்திரமும் பயிற்சியும் தான் நடந்த சண்டைக்கு வெற்றியாக உள்ளது. கடந்த 7 ஆம் நாள் எதிரி முன்னேறுகையில் எமது போராளிகள் தமது நிலைகளை விட்டு அகலாமல் இருந்து இருக்கும் வெடிபொருட்களுடனும் மன உறுதியுடனும் சண்டை பிடித்தனர். எமது கிட்டு பீரங்கிப் படையணியினரினதும், குட்டிசிறி மோட்டார் பீரங்கிப் படையினரதும் சூட்டாதரவுடன் இரண்டரை மணிநேரம் இத்தாக்குதல் நடத்தப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. போராளிகளின் அயராத உழைப்பும் பின்னணிகளில் உள்ள அனைத்து செயற்பாட்டின் வேகமும்தான் இத்தாக்குதலை முறியடித்துள்ளோம் போராளிகளின் அர்ப்பணிப்பும் மனவலிமையும் தான் உறுதியான வெற்றியை தந்தது. வடபோர்முனையில் சிறிலங்காப் படையினர் முன்னேற முயற்சித்தால் இதனைவிட பாரிய தாக்குதலை எமது போராளிகள் மேற்கொள்வார்கள் தொடர்ந்தும் மக்கள் ஆதரவுடனும் பக்க பலமாகவும் இருந்து செயற்பட வேண்டும் என்றார் ஜெரி. மக்கள் சார்பாக கிளிநொச்சி சந்தை வர்த்தக சங்கத் தலைவர் றஞ்சித் உரையாற்றினார். தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளுடன் மக்கள் கலந்துரையாடினர். போராளிகளுக்கு உணவை சமைத்து கொடுத்துள்ளனர்.
Tuesday, November 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.