[செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2007] யாழ்ப்பாணத்தில் நேற்று காலை வர்த்தகர் உள்ளிட்ட இருவர், ஈருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். யாழ். மருத்துவமனை வீதியில் முலவைச் சந்திப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 5:45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குருநகர் தொடர்மாடியில் வசிக்கும் 5 பிள்ளைகளின் தந்தையான பிரான்சிஸ் பிலிப் (வயது 39) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். முன்னர் கடற்றொழில் செய்து வந்த இவர், தற்போது வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று அதிகாலை இவர் சந்தைக்குச் சென்று கொண்டிருந்த போதே ஈருளியில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை, நேற்றுக் காலை 8:30 மணியளவில் கச்சேரி - நல்லூர் வீதியில் ஆசிர்வாதப்பர் ஒழுங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மற்றொருவர் கொல்லப்பட்டார். உந்துருளியில் சென்று கொண்டிருந்த இவர்மீது ஈருளியில் வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே இவர் கொல்லப்பட்டார். இருவரது சடலங்களும் யாழ். மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, மானிப்பாய் நவாலிப்பகுதியில் குளம் ஒன்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை 3:00 மணியளவில் இடம்பெற்றது.
Tuesday, November 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.