[திங்கட்கிழமை, 17 செப்ரெம்பர் 2007] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசிய கட்சிக்கு விடுத்துள்ள சவால் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை. காரணம் நாங்கள் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படவில்லை. மாறாக நாட்டு மக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே செயற்பட்டு வருகின்றோம். காலம் வரும்போது நாங்கள் அரசாங்கத்தை கவிழ்ப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி முடியுமானால் எதிர்வரும் வரவுசெலவு திட்டத்தின்போது அரசாங்கத்தை கவிழ்க்கட்டும் பார்க்கலாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : எதிர்வரும் வரவுசெலவு திட்டத்தின்போது ஐக்கிய தேசிய கட்சி முடியுமானால் அரசாங்கத்தை கவிழ்க்கட்டும் பார்க்கலாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதலில் ஜனாதிபதியின் சவால் குறித்து ஐக்கிய தேசிய கட்சி அலட்டிக்கொள்ளவில்லை என்பதனை தெரிவிக்கவேண்டும்.. காரணம் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நாங்கள் செயற்படவில்லை. இந்த நாட்டு மக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவும் அவர்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யும் வகையிலேயே செயற்பட்டுவருகின்றோம். இந்நிலையில் ஜனாதிபதி விடுக்கும் சவால் குறித்து நாங்கள் அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம். அதேவேளை எப்போது அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்பது ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியும். அது குறித்து யாரும் கவலையடைய தேவையில்லை. நேரம் வரும்போது நாங்கள் எமது பலத்தைக் காட்டி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம். எப்போது அதனை செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அதற்கான செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். நாடயளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்களை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய சபை ஆரம்பித்துள்ளது. எமது தேசிய சபை வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது.
Monday, September 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.