[திங்கட்கிழமை, 17 செப்ரெம்பர் 2007] கம்பஹாவில் பொலிஸார் இன்று காலை மேற்கொண்ட தேடுதலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் அங்கிகள் உட்பட கைக்குண்டுகள் சிலவும் மீட்க்கப்பட்டுள்ளது. கதிரானை வென்டேசி வத்தையில் பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து தாக்குதல் அங்கியொன்றையும் விமானப்படையினரின் உடையொன்றையும் மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு தற்கொலை குண்டுத்தாக்குதல் அங்கி செயலிழக்க செய்யப்பட்டுள்ளது. அதேவேளை நீர்கொழும்பு பிட்டிபன, கதிரானை ஆகிய பகுதிகளிலும் இன்றுகாலை தேடுதல் மேற்கொண்ட பொலிஸார் 6 கைக்குண்டுகளை கைப்பற்றியுள்ளனர் என ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
Monday, September 17, 2007
கதிரானை மற்றும் நீர்கொழும்பில் பொலிஸார் தேடுதல் தற்கொலை அங்கிகள், கைக்குண்டுகள் மீட்பு.!
Monday, September 17, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.