[புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2007]
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், அவரது முதன்மை ஆலோசகருமான பசில் ராஜபக்ச சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க எதிர்க்கட்சியினர் இன்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை காலை தொடங்கியதும் சபாநாகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார முன்னிலையில் பசில் ராஜபக்ச பதவியேற்கச் சென்றார். அப்போது எதிர்க்கட்சி வரிசை உறுப்பினர்கள் மேசையில் கைகளை தட்டி கூச்சலிட்டனர். பசில் ராஜபக்சவை பதவியேற்க விடாமல் அவருக்கு எதிராக பெருத்த குரலில் முழக்கமிட்டனர்.அரசாங்கத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் ஒருவரை நாடாளுமன்ற ஊறுப்பினராக்க கூடாது என்று ஐக்கிய தேசியக்கட்சியினர் முழக்கமிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட பசில் ராஜபக்ச அரச தரப்பு பின்வரிசையில் அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் சென்று அமர்ந்தார்.
இந்நிலையிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்குரிய பணத்தில் பத்து விழுக்காட்டை பசில் தரகுப்பணமாக பெற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதனால் அரச தரப்புக்கும் எதிரணியினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. நாடாளுமன்றில் பெரும் அமளி-துமளி ஏற்பட்டது.
இதனையடுத்து நாடாளுமன்றத்தை 10 நிமிடத்துக்கு இடைநிறுத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
யார் இந்த பசில்?
மகிந்த ராஜபக்ச பரம்பரையில் இருந்து அரசியலுக்கு பிரவேசிக்கும் எட்டாவது நபர் பசில் ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அவரது முதன்மை ஆலோசகர் என்ற பெயரில் சிறிலங்கா அரசியலுக்குள் கால்பதித்த பசில் ராஜபக்ச திரைமறைவில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
மகிந்த ராஜபக்சவை அரச தலைவராக்குவதற்கு அவர் திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டதாக ஏற்கனவே எதிரணிக்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களின் போது, பேச்சு நடக்கும் பகுதிக்கு முன்னேயே சென்று அங்கிருந்து கொண்டே பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து மகிந்தவுக்கு உடனுக்குடன் தகவல் வழங்கும் நபராகவும் பசில் செயற்பட்டிருந்தார்.
மேலும் எதிரணியினரை அரசுப்பக்கம் வளைத்துப்போடும் பேச்சுவார்த்தைகளையும் அதற்கான கொடுக்கல் வாங்களையும் பசில் ராஜபக்ச மேற்கொண்டிருந்தார்.
அண்மையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் மூத்த உறுப்பினரான பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்ததுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைச்சுப் பொறுப்பை கைவிடவும் பசில் ராஜபக்ச காரணமாக இருந்தார்.
இந்நிலையிலேயே மறைந்த பிரதி அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு பசில் ராஜபக்சவை நியமித்து அவரை அரசியலில் நேரடியாக களம் இறக்கியுள்ளார் மகிந்த ராஜபக்ச.
தேசிய காங்கிரஸ் கட்சி விசனம்
அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே மறைந்த பிரதி அமைச்சர் அன்வர் இஸ்மாயில் இருந்தார். எனவே அவரது மறைவையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு தேசிய காங்கிரஸ் கட்சியே தனது உறுப்பினர் ஒருவரை நியமிக்கும் என்றும் அதாவுல்லா வலியுறுத்தியபோதும் அதனை பொருட்டாக எடுக்காது தனது சகோதரரை அந்த வெற்றிடத்துக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நியமித்திருப்பது தேசிய காங்கிரஸ் கட்சியினடையே விசனத்தை தோற்றுவித்திருப்பதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி:புதினம்
Wednesday, September 19, 2007
நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ச பதவியேற்க கடும் எதிர்ப்பு- நாடாளுமன்றம் இடைநிறுத்தம்.!
Wednesday, September 19, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.