[திங்கட்கிழமை, 17 செப்ரெம்பர் 2007] ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவமும் நீதியும் கிடைக்க இந்தியா உதவ வேண்டும். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பின்னடைவுகளை கண்டுள்ளனர். எனவே, அரசியல் ரீதியிலான தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே சரியான தருணமாகும் என்று "இந்து' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். ராம் தெரிவித்தார். இலங்கையில் இந்திய சமூகத்தினரால் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இரவு விருந்துபசாரமொன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ராம் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: இலங்கையில் உள்ள மிதவாதிகள் ஜனநாயகத்தின் மூலம் இந்தியா உதவி செய்ய வேண்டும். இலங்கை தொடர்பாக பெற்றுக் கொண்ட கடந்தகால அனுபவங்களின் வாயிலாக இந்தியா சிறந்த பாடத்தை கற்றுக் கொண்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு இறந்த காகிதமென கூறப்படுகின்றது. ஆனால் ஜனநாயக ரீதியான தீர்வொன்றை முன்னெடுக்கும் போது அவ்வொப்பந்தத்தின் முக்கியம் உணரப்படும். இவ்வொப்பந்தத்தை நிர்வகித்ததில் அதனை நடைமுறைப்படுத்தியதில் இரு தரப்பும் தவறிழைத்துள்ளனர். ஆனால் ஒப்பந்தமானது இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது ஒரு முக்கிய படியாக அமையும். இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தி, அவ்வமைப்பை இந்தியா தடை செய்துள்ள காரணத்தால் இந்தியா புலிகளுக்கு எதிரே அமர்ந்து, அவர்களுடன் உத்தியோகபூர்வமான முறையில் எவ்வித பேச்சுக்களையும் மேற்கொள்ளாது. இலங்கை பிரச்சினையானது இந்தியாவில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் அங்குள்ள தமிழ் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இது உள்ளது. எனினும் 1991 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ரஜீவ்காந்தி விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து இந்தியாவின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது. இங்கு இனப்பிரச்சினை விடயத்தில் முக்கிய இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட தவறி விட்டன. பிரச்சினையை தீர்ப்பதற்காக பேச்சுவார்த்தை ஒன்றிற்கு செல்வதை விட, அங்கு எதைப் பேசப் போகின்றோம் என்பதே முக்கியமானதாகும். இலங்கையில் சமாதான பேச்சுவார்த்தைகள் பின்னடைவைச் சந்தித்தமைக்கு இதுவே காரணம். பேச்சுவார்த்தைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதேயன்றி அங்கு என்ன பேசப்பட வேண்டும் என்பது திட்டமிடப்படவில்லை. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பின்னடைவுகளை சந்தித்துள்ளனர். எனவே, அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றிற்கு அவர்களை வரவழைப்பதற்கு இதுவே சரியான தருணமாகும். வீரகேசரி நாளேடு
Monday, September 17, 2007
அரசியல் தீர்வுக்கு புலிகளை வரவழைப்பதற்கு இதுவே தருணம் "இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராம் கூறுகிறார்.!
Monday, September 17, 2007
4 comments
Subscribe to:
Post Comments (Atom)






தருணம் பார்த்துக் கல்லெறியக் காத்திருக்கும் ராம். தோற்றுப்போனவர்கள் வரிசையில் முன்னிற்பவர். ஊடகர்கள் நீதியின் வழி நிற்கும்போது தோற்பதில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் சிதைப்பு நடந்தோறியவிதம் அந்த ஒப்பந்தத்திற்குக் காவலாக வருகைதந்த அமைதிப்படைத் தளபதிகளின் போட்டிகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ReplyDelete--------------------
இறைவன்
இவன் ராமன் பெயரை கொண்டவன் எப்பவும் திராவிடனுக்கு எதிராக தான் இருப்பான்.
ReplyDeleteசந்திரிகா என்றா அவருக்கு உயிர்
--------------------
நேசன் ஈழத்து அகதி
மிஸ்டர் நேசன்:
ReplyDeleteஇவன் ராமன் பெயரை கொண்டவன் எப்பவும் திராவிடனுக்கு எதிராக தான் இருப்பான்.
சந்திரிகா என்றா அவருக்கு உயிர்
இப்பிடியே யோசிச்சா நம்மட ஊர் அப்பாவி ராமலிங்கங்களையும் ராமேஸ்வரன்களையும் இன்னும் பலரையும் தீர்த்துக் கட்டவேண்டியிருக்கும்.
--------------------
S. K. RAJAH
அயோக்கிய சிகாமணி நரசிம்மன் கொலம்போவில் பேசியுள்ள பேச்சிற்கு அவனைத் தமிழர்கள் காலில் உள்ளதால் மரியாதை செய்திருக்க வேண்டும்.இவன்
ReplyDeleteதான் இந்திய அரசின் அரசப் பேச்சாளனா?
மாவீரர் நெடுமாறனை இவ்வளவு கொச்சைப் படுத்திச் சிங்களவர்களே பேசியது கிடையாது.
மானங்கெட்ட நரசிம்மன் ராமின் "ராமின் பொய்கள்" என்றே இணைய தளம் செய்தித் தொகுப்பு இடும் அளவிற்கு அயோக்கியனாக இருக்கும் இவன் பத்திரிக்கை தர்மம் பற்றிப் பேசுவதெல்லாம் பச்சைத் தேவடியாள் பேச்சே!
சிங்கள இன வாதத்தின் பொறுக்கியாக இருக்கும் இவன் என்ன தமிழர்களுக்கு நியாயம் சொல்ல வருவது.நரிகளின் நய வஞ்சகத் தந்திரத்தின் மொத்த உருவே இந்த மனித உரு.தயை செய்து தமிழர்களே இந்த நரிகளுக்கு மரியாதை கொடுக்காதீர்கள்.