Wednesday, September 12, 2007

சுனாமி அபாயம் எச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளது.!

[புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2007]

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள பாரிய நில நடுக்கத்தினைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடல் சமுத்திரப் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மீளப் பெறப்பட்டுள்ளது.

இந்தோனேசிய சுமாத்திராத் தீவில் பெங்குலு எனும் இடத்தில் இன்று இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. றிக்ரர் அளவு கோலில் 7.9 வீதமாகவும் 6.1 வீதமாகவும் பதிவாகியுள்ளது.

இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவை ஒரு மணி நேரத்தில் தாக்கக் கூடும். இந்தியா, இலங்கையை 3 மணி நேரங்களில் தாக்கக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தமிழீழம், சிறீலங்கா உட்பட இந்திய சமுத்திரத்திரக் கரையோர நாடுகளை மீண்டும் சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


"பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம்" வழங்கிய எச்சரிக்கை அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயருமாறு சிறீலங்காவின் இடர் முகாமைத்துவ அமைச்சைச் சேர்ந்த கீர்த்தி எக்கநாயக்க அறிவித்துள்ளார்.

இருப்பினும் இது சுனாமி ஏற்படுவதற்கான நில நடுக்கமா? என்பதை சரியாகத் தீர்மானிக்க முடியவில்லை எனவும், "பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம்" அறிவித்துள்ளது.

இன்று மாலை 6.10 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 15 கிலோமீற்றர் தூரத்திற்கு கடலிற்கு அடியிலும், 100 கிலோமீற்றர் தூரம் பங்குலு பிரதேச நிலப்பரப்பிலும் பரவியிருப்பதாக அமெரிக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தோனேசிய கடல் பகுதியில் எதிர்பார்த்தபடி சுனாமி அலைகள் எழவில்லை. இதையடுத்து சுனாமி அபாய எச்சரிக்கை மீளப் பெறப்பட்டு விட்டது.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26இல் இந்திய சமுத்திரத்தில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட சுனாமியில் 30 ஆயிரம் வரையிலான தமிழ் பேசும் மக்கள் உட்பட ஒரு இலட்சத்து முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.