[வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2007]
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான் படையின் கிபீர் வானூர்திகள் இன்று காலை வான் வான்வழித் தாக்குதலை நடத்தின.
சிறிலங்கா வான்படையினர் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு இத்தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலினால் பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடினர்.
இரு வானூர்திகள் காலை 8.30 மணிமுதல் 20 நிமிட நேரம் இத்தாக்குதலை நடத்தின. மொத்தம் 12 குண்டுகள் வீசப்பட்டன.
புதுக்குடியிருப்பில் பாடசாலை கட்டடங்கள் அதிர்ந்தன. அச்சமடைந்த மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து பதற்றத்துடன் வெளியேறிச் சென்றனர்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் அதிர்வால் மயக்கமடைந்தனர்.
வானூர்திகள் குண்டுத்தாக்குதலில் நடத்திய போது மாணவர்கள் காலை ஒன்றுகூடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.