[வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2007] இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது நிலநடுக்கத்துக்குப் பின்னைய அதிர்வாக இல்லை என்றும் ஒரு நிலநடுக்கமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நேரப்படி காலை 6.49 மணிக்கு ஏற்பட்ட இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.9 அலகுகள் பதிவாகி இருந்ததைத் தொடர்ந்து மீண்டும் அந்நாட்டில் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஏற்பட்ட்ட நிலநடுக்கமானது மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் நேற்று புதன்கிழமை மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்து மா சமுத்திரத்தின் அனைத்து நாடுகளுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
Thursday, September 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.