[வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2007]
யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான 74 வயது பெரியவர் பழ. நெடுமாறன் அய்யா சென்னையில் இன்று வியாழக்கிழமையும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார். தமிழீழ விடுதலை ஆதரவாளர்களான வைகோ, தொல். திருமாவளவன், தியாகு, விடுதலை க.இராசேந்திரன் உள்ளிட்டோர் நெடுமாறனை நேரில் சந்தித்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் வாகனத் திருத்துமிட வளாகம் ஒன்றினுள் அமர்ந்து பழ.நெடுமாறன் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை இன்று காலையில் தொடங்கினார். அப்போது அந்த வளாகத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்த காவல்துறையினர் உண்ணாநிலைப் போராட்டப் பந்தலைப் பிரித்து இங்கே உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளனர். "இது எங்களுக்குரிய இடம். இங்கே உண்ணாநிலை இருப்பதை எவரும் தடுக்க முடியாது" என்று வாதிட்டுள்ளனர். இதனைப் படம்பிடித்த "சண்" தொலைக்காட்சியினரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இதனால் காவல்துறையினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையே அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து காவல்துறையினர் வெளியேறினர். ஊடகவியலாளர்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரி மன்னிப்பு கோரினார்.
சென்னையில் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை பழ.நெடுமாறன் தொடர்ந்ததையடுத்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்தும் இடத்துக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் செயலாளர் தியாகு, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், தமிழக அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி, சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் அங்கு திரண்டுள்ளனர். பழ.நெடுமாறன் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் செல்ல ஊடகப் புகைப்படக் கலைஞர்கள் அனுமதிக்கப்படவில்லை. உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் வளாகத்திற்கு வெளியே காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பழ. நெடுமாறனை நேரில் சந்திக்க வந்த தொல். திருமாவளவன், ஊடகவியலாளர்களிடம் கூறுகையில்,
யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப மத்திய அரசு அனுமதி மறுப்பது நியாயம் அல்ல. இதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. மத்திய அரசுக்கு இது தொடர்பில் எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பு தமிழக முதல்வருக்கும் உண்டு என்றார்.
போராட்டம் ஏன்?
தமிழீழத்தின் யாழ்ப்பாணத்தை இதர பகுதிகளுடன் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலை பாதையை சிறிலங்கா அரசாங்கம் கடந்த ஆண்டு மூடியது. இதனால் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத நிலையில் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துயருக்குள்ளாகி வருகின்றனர். இதனால் யாழ்ப்பாண மக்களுக்காக தமிழ்நாட்டு மக்களிடம் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் 1 கோடி ரூபா மதிப்பிலான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை திரட்டினர்.
உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினூடே அனுப்ப முடிவு செய்யப்பட்டது. உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதி அளிக்கக் கோரி இந்திய மத்திய அரசாங்கத்துக்கு செஞ்சிலுவைச் சங்கம் கடிதம் அனுப்பியது. ஆனால் 7 மாத காலமாக இந்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. செஞ்சிலுவைச் சங்கத்தினூடே உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்ப இந்திய அரசு அனுமதி அளிக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் தமிழ்நாட்டின் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் திரட்டிய அந்தப் பொருட்களை அனுப்ப இந்திய அரசாங்கம் அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத் தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை படகுகளில் எடுத்துச் செல்லும் "தமிழர் தியாகப் பயணத்தை" நடத்துவோம் என்று பழ. நெடுமாறன் அறிவித்தார்.
நாகப்பட்டினத்தில் பெருந்திரளான தமிழீழ விடுதலை ஆதரவாளர்களுடன் பழ.நெடுமாறன் இந்த தியாகப் பயணத்தை இன்று புதன்கிழமை காலை தொடங்க முயற்சித்தார். ஆனால் மீனவர்களை அச்சுறுத்தி படகுகளைத் தரக்கூடாது என்று தமிழ்நாடு காவல்துறை தடை செய்துவிட்டது. இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து நாகை துறைமுகம் நோக்கி தமிழீழ விடுதலை ஆதரவாளர்களுடன் திரண்டு சென்ற பழ. நெடுமாறன், யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் வரை தான் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக திடீரென அறிவித்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் நெடுமாறன் உள்ளிட்டோரை தமிழ்நாடு அரசு கைது செய்தது. கைது செய்த போதும் தொடர்ந்தும் உண்ணாநிலைப் போராட்டத்தை அவர் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் இரவும் உணவு உட்கொள்ளாதிருந்த பழ. நெடுமாறன் இன்று காலை சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய பின்னரும் இன்று காலை முதல் சென்னை கோயம்பேட்டில் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார். முதுமையில் ஏற்படும் உபாதைகளுக்கான மருந்துகளை நாளாந்தம் 3 நேரங்களிலும் அவர் உட்கொண்டு வந்தார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி:புதினம்

கலைஞர்ஜி அவர்கள் சோனியாஜி போடுகின்ற செஞ்சோற்றுக்கடனுக்காக
ReplyDeleteவஞ்சனையில் புரள்கின்றார். வரலாறு அவரை சபிக்கும் என்ற உணர்வுகூட இல்லாத மனிதர்.
புள்ளிராஜா