[வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2007]
மன்னார் படகுத்துறைக் கிராமத்தின் மீது சிறிலங்கா வான்படையின் போர் வானூர்திகள் நடத்திய குண்டுவீச்சில் தனது இடது காலை தொடையுடன் இழந்த 12 வயதுச் சிறுமிக்கு தமிழீழ தேசியத் தலைவரின் நம்பிக்கை நிதியத்தில் இருந்து 1 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் இலுப்பைக்கடவை படகுத்துறைக் கிராமத்தின் மீது கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் நாள் காலை சிறிலங்கா வான்படையின் கிபிர் போர் வானூர்திகள் நடத்திய கோரத்தாக்குதலில் படகுத்துறைக் கிராமத்தில் வசித்து வந்த அ.யுனிஸ்ரெலா என்ற 12 வயதுச்சிறுமி தனது இடது காலை தொடையுடன் இழந்திருந்தார்.
அச்சிறுமியின் எதிர்கால கல்விப்பயன்பாட்டிற்காக தமிழீழ தேசியத் தலைவரால் வழங்கப்பட்ட நிதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன், அச்சிறுமியின் இல்லத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கையளித்தார். தமிழீழ வைப்பகத்தின் நாச்சிக்குடா கிளையில் வைப்பிலிடப்பட்டு அதற்குரிய வங்கிப்புத்தகம் சிறுமியிடம் கையளிக்கப்பட்டது.
சிறிலங்கா வான்படைத் தாக்குதலில் சிறுமியின் தாய் மற்றும் சகோதரர்கள் இருவரும் காயமடைந்திருந்திருந்தனர். காலை இழந்த சிறுமி தற்போது நாச்சிக்குடா குமுழமுனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் 7 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.
இதே தாக்குதலில் தனது வலதுகாலை தொடையுடன் இழந்திருந்த ஜெ.அன்ரனி என்ற ஆறு வயதுச்சிறுவனின் எதிர்கால கல்வித் தேவைகளுக்காக தமிழீழத் தேசியத் தலைவர் தனது நம்பிக்கை நிதியத்தில் இருந்து 1 இலட்சம் ரூபா நிதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.