[புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2007]
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை நலமடைந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்று "கடற்கரும்புலிகள் பாகம் - 11, தேசத்தின் புயல்கள் பாகம் - 5" இறுவட்டு அறிமுக நிகழ்வில் பேசிய கடற்புலிகளின் தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார்.
"கடற்கரும்புலிகள் பாகம் - 11, தேசத்தின் புயல்கள் பாகம் - 5" இறுவட்டு அறிமுக நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
புலிகளின் குரலின் அமலன் அரங்கில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வுக்கு திரைப்பட வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் ராதா தலைமை வகித்தார்.
பொதுச்சுடரை தமிழீழ மாவீரர் பணிமனை பணி முதல்வர் பொன் தியாகம் ஏற்றினார்.
ஈகச்சுடர் லெப். கேணல் திலீபன் திருவுருவப்படத்துக்கு படைப்பாளி வளவைவளவன் ஈகச்சுடரேற்றி மலர்மாலையை சூட்டினார்.
கடற்கரும்புலிகள் பாகம் - 11 இறுவட்டை கடற்புலிகளின் தளபதி விநாயகம் வெளியிட இரு மாவீரர்களின் சகோதரரும் போராளியுமான சங்கர் பெற்றுக்கொண்டார்.
தேசத்தின் புயல்கள் பாகம் - 5 ஐ செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள் வெளியிட பொன் தியாகம் பெற்றுக்கொண்டார்.
ஊடகவியலாளர் விவேக், போராளி தமிழ்க்கவி ஆகியோர் மதிப்பீட்டுரையை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் தளபதி விநாயகம் ஆற்றிய சிறப்புரை:
தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணத்தின் படி தாயக விடுதலைப் போராட்டத்தின் மீட்பில் கடற்புலிகளின் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.
தமிழீழ மக்களுக்கு எதிரான அழிப்பு நடவடிக்கைளை சிறிலங்கா இராணுவம் தொடர்கின்றது. மக்களை பெரும் அவலத்துக்குட்படுத்தும் நடவடிக்கையில் சிங்களப் படைகள் ஈடுபட்டுள்ளன.
இந்த வேளையில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களை குழப்பும் வகையில் பொய்களைப் பரப்புரை செய்து வருகின்றது.
கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தொடர்பில் பொய்ப் பரப்புரைகள் அரசாலும், அதன் ஊடகங்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
படகுப் பயிற்சி விபத்து ஒன்றில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை விழுப்புண் அடைந்தார். அவரின் மகன் அதில் உயிரிழந்தார்.
கேணல் சூசை விழுப்புண் அடைந்து அதற்கு சிகிச்சை பெற்று இப்போது மீண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த அறிமுக நிகழ்வும் கூட கேணல் சூசை ஒழுங்கு செய்து அவரின் வழிகாட்டுதலில் தான் நடக்கின்றது என்றார் அவர்.
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிப் பொறுப்பாளர் துளசிச்செல்வன், புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், கடற்புலிகள் மகளிர் தளபதி பாவை, உள்ளிட்டோரால் இசைப்பாடல் கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
நன்றி:புதினம்






தளபதி மீண்டு வந்தது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பூரண குணமடையப் பிரார்த்திக்கும் அதேவேளை மகனைப் பிரிந்து துயருறும் அவருக்கும்.. குடும்பத்தாருக்கும்.. எங்கள் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ReplyDelete-------
நெடுக்ஸ்
தமிழர் கடற்சேனையின் தளபதி அவர்கள் விழுப்புண் மாறி மீண்டும் தனது பணிகளை பொறுப்பேற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது.
ReplyDeleteசிறிலங்கா அரசின் பொய்பரப்புரைகளை உடைக்கும் வகையில் உண்மையை வெளியே கொண்டுவந்த தளபதி விநாயகத்திற்கு நன்றிகள்.
இதேவேளை சிறிலங்காவின் மற்றொரு பொய்ப் பரப்புரையை உடைக்கும் வகையில் விடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை மாவட்ட தளபதி கேணல் பதுமன் அவர்கள் மாவீரர் ஒருவரின் வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
தளபதி குணமடைய பிராத்தனைகளும்
ReplyDeleteமகனுக்கு கண்ணீர் அஞ்சலிகளும் .
.....
kumar