[புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2007]
சிறிலங்காவுக்கான அனைத்து வகையான உதவிகளையும் அனைத்துலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் "தமிழ்நெட்" இணையத்தளத்துக்கு இன்று புதன்கிழமை அவர் அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம்:
வலிந்த தாக்குதல் நடவடிக்கையிலிருந்து தடுத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுமை காத்து வருகின்றனர். இத்தகைய ஒரு அரசாங்கத்தினுடன் இணைந்து அமைதி முயற்சிகளை முன்னெடுப்பது பயனற்றது என்பதை அனைத்துலகம் உணர வேண்டும்.
சிறிலங்காவுக்கான ஒவ்வொரு உதவியுமே திட்டமிட்ட வகையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயக நிலப்பரப்பை அகதிகள் நிலமாக்கி, சிங்களக் குடியேற்றமாக்கி வருகிறது.
ஆகையால் சிறிலங்கா அரசாங்கத்துக்கான அனைத்து வகையான உதவிகளையும் நிறுத்தி அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்க சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அனைத்துலக சமூகத்துக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
சிறிலங்கா அரசாங்கமானது தமது மனித உரிமை மீறல்கள் வெளிஉலகத்தைச் சென்றடைய விடாமல் தடுத்து வருவதுடன் பொய்யான பரப்புரைகளுக்கான தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்தி வருகிறது. அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதிகள் சிறிலங்காவுக்கு வருகை தருகின்றபோது மகிந்த ராஜபக்சவும் அவரது அமைச்சரவை சகாக்களும் தவறான தகவல்களையும் பிம்பத்தையும் உருவாக்குகின்றனர்.
மேலும் அனைத்துலக சமூகத்தின் கவலைகளை ஏற்காமல் சிறிலங்கா அரசாங்கமானது இனப் படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு பயங்கரவாத அரசாங்கமாக செயற்பட்டு வருகிறது.
சில அனைத்துலக அரசாங்கங்கள் உண்மை நிலைகளை அறியாமல் சிறிலங்கா அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன. இது இந்தத் தீவில் இனமோதலை அதிகரிக்கத்தான் உதவும்.
ஆகையால் அனைத்துலக சமுதாயமானது பாதிக்கப்பட்ட பகுதிகளை தானே நேரில் பார்வையிட்டு நிலைமைகளை அவதானிக்க வேண்டும். தரவுகளை தங்களது சொந்த வளங்கினூடே சேகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார் தமிழ்ச்செல்வன்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.